யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பிடியில் காணப்படும் 2 ஆயிரத்து 624.29 ஏக்கர் நிலப்பரப்புக்களே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணிகள் விடுவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக
விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி
திட்டங்களுக்காக இந்த வருடம் ஆயிரத்து 303.42 மில்லியன் ரூபா நிதி
செலவழிக்கப்பட்டுள்ளது.” என்றார்.