புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து புஷ்பா தி ரூல் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி வெளியான புஷ்பா தி ரூல், முதல் பாகத்தை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
22 ஆண்டுகளில் நடிகை த்ரிஷா சேர்த்த சொத்து.. முழு விவரம் இதோ
வசூல்
6 நாட்களில் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்தது. இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா தி ரூல் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, புஷ்பா தி ரூல் உலகளவில் 11 நாட்களில் ரூ. 1300 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 1500 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.