முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரி செலுத்துவோருக்கு மற்றுமொரு காலக்கெடு

Courtesy: Sivaa Mayuri

வரி செலுத்துவோர், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க, தமது வரிகளை செலுத்துவதற்கான  காலக்கெடு, இந்த டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் ( Department of Inland Revenue) அறிவித்துள்ளது.

இதன்படி, 2024, நவம்பர்  மாதத்திற்கான வெற் மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை,  டிசம்பர் 20  அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அபராதத்திலிருந்து நிவாரணம்

எனினும், 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கின் மீது செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தத் தவறியவர்கள், இந்தக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 26 ஆம் திகதியாகும்.

வரி செலுத்துவோருக்கு மற்றுமொரு காலக்கெடு | Another Deadline For Taxpayers

அத்துடன் செலுத்தப்படாத சுய மதிப்பீட்டு வரி, நிலுவைத் வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரி என்பனவும் இந்த திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று திணைக்கள ஆணையர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த காலக்கெடுவை தவற விடும் வரி செலுத்துவோர், தம்மால் செலுத்தப்படாத தொகைகளுக்கான அபராதத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.

இறைவரிச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை 

ஏற்கனவே கள சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலுவையிலுள்ள சுயமதிப்பீடு மற்றும் நிலுவைத் தொகை வரிகளை மீளப்பெறுவதற்கு உள்நாட்டு இறைவரிச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோருக்கு மற்றுமொரு காலக்கெடு | Another Deadline For Taxpayers

எனவே, வரி செலுத்துவோர் தங்களின் நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்ப்பதன் மூலம் தங்கள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்