முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா(india) செல்லவுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரை
இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இம்முறை இந்தியாவிற்கு ஒரு வாரகாலத்திற்கு மேலாக விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
புராதன இடங்களை பார்வையிட அதிக நேரம் ஒதுக்கீடு
இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ரணில் விக்ரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.