முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல்

யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம் இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின்
போது குறித்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை

குறித்த தனியார் நிறுவனம் தமது தொழில் துறை ஒன்றை
ஆரம்பிப்பதற்கு உயர் மின்னழுத்த மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பித்திருந்தது.

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல் | Sunnagam Pvt Co Gets Legal Power Connection

அதன் பிரகாரம் அப்போது மக்களின் 80 வீதமானவர்களின் கையெழுத்துடன் உரிய
ஆவணங்களை பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சில நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மின் இணைப்பை வழங்குவதற்கு
இடையூறு விளைவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த நிறுவனத்திற்கு மின்சார
இணைப்பு வழங்கும் கம்பங்கள் அந்தப் பகுதியின் பிரதேச சபையின் அனுமதியில்லாமலா
நாட்டப்பட்டுள்ளன? என வினவினார்.

ஒருங்கிணைப்பு குழு

இதன்போது கருத்துத் தெரிவித்த மின்சார சபை உயர் அதிகாரி, மின்சார சபை 2009 31A
பிரிவின்படி பிரதேச சபையின் அனுமதியை தாண்டி பொது வீதியில் மின் இணைப்பை வழங்க
முடியும். அது பற்றிய பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை.

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல் | Sunnagam Pvt Co Gets Legal Power Connection

வேண்டுமானால் எமது மின் இணைப்பு விவகாரத்தை சட்டரீதியாக யாரும் சவாலுக்கு
உட்படுத்தப்பட முடியும் என்றார்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன்
கலந்துரையாடி இரண்டு கிழமைக்குள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவுக்கு
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியால் உயர் மின்னழுத்த மின்சார இணைப்பு வழங்கியதற்கு அப்பகுதி
மக்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.