சரவண விக்ரம்
விஜய் டிவியில் மக்கள் நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், 5 வருடங்களுக்கும் மேலாக நேர மாற்றம் இல்லாமல் ஒளிபரப்பானது. இந்த முதல் சீசனில் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே மக்களிடம் நல்ல பெயர் கிடைத்தது, பிரபலமும் ஆனார்கள்.
முதல் சீசன் முடிந்த கையோடு புதிய கதைக்களத்தில் 2வது சீசன் தொடங்கியது.
சுந்தரி தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றொரு சீரியல்… எது தெரியுமா?
சரவண விக்ரம்
இந்த முதல் சீசனில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் சரவண விக்ரம்.
இவர் சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் அவ்வளவாக இவர் ஸ்கோர் செய்யவில்லை, மக்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார்.
பிக்பாஸ் பிறகு சீரியல்கள் பக்கம் வருவார் என பார்த்தால் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது அவர் ஹீரோவாக ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். பிரவீன் கே மணி என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார்.
இப்பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.