இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும் அதேவேளையிலே, அதை நிறைவேற்றுவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இந்தியா மேற்கொள்ளும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
யாழில் இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு இன்று (18) நினைவு கூரப்பட்ட நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அன்றிலிருந்து இன்று வரை சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.
எனினும், அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க, முன்னதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…