முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

தென் கொரியாவுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பியதாகக் கூறப்படும் E-8 விசா ஊழல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட பல்வேறு துறைகளில் முன்னைய நிர்வாகங்கள் இழைத்த பிழைகளை நிவர்த்தி செய்வதே புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை எனவும், அதற்கான திருத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் தலையீடு

டிசம்பர் 18 அன்று வரும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை கொண்டாடும் வகையில் Voice of Migrant Network (VoM) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர் | Cid Probe Into E8 Visa Scheme

முன்னதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர், ‘E8 வீசா’ முறையானது முறையான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் பராமரிக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஒருவரின் நேரடித் தலையீடு காரணமாகக் கூறப்பட்டது.

SLBFE இன் கூற்றுப்படி, தென் கொரியாவில் குறுகிய கால பருவகால வேலைவாய்ப்புக்கான E8 விசாக்களை வழங்குவது சட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

அரசியல் சார்பு நியமனங்கள்

இதேவேளை, அரசியல் சார்பு அடிப்படையில் இராஜதந்திர சேவைக்கான நியமனங்கள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் உரையாற்றினார்.

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர் | Cid Probe Into E8 Visa Scheme

அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்ட கணிசமான நபர்கள் ஏற்கனவே மீள அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இராஜதந்திர சேவைக்கு தகுதியான நபர்களே நியமிக்கப்படுவதை உறுதி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.