2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில், தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அநுர(Anura Kumara Dissanayake) அரசாங்கம் இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருந்தது.
மேலும், கடந்த கால ஊடகவியலாளர் சந்திப்புகளில் இதனை பேராயர் கர்தினாலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அநுர அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்காது எனவும், அந்த நம்பிக்கை இல்லையெனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..