இலங்கையில் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசாங்க அச்சுத் திணைக்களம் (Department of Government Printing) 2025 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு 26 பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் அதிக விடுமுறைகளைக் கொண்ட மாதமான ஏப்ரல் மாதத்தில் 4 பொது விடுமுறைகளும் 1விசேட வங்கி விடுமுறையும் காணப்படுகின்றது.
வெசாக் பௌர்ணமி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான ஆயத்த நாளான ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமையும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 திங்கட்கிழமையும் விடுமுறை நாட்களாகும்.
அத்துடன், மே 12 திங்கட்கிழமை கொண்டாடப்படும் வெசாக் பௌர்ணமி போயா தினம், ஆண்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க திகதியாகும்.
பொது விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என அரசாங்க அச்சக திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த திகதிகள் அஞ்சல், சுங்கம் மற்றும் வானிலை துறைகள் உட்பட அனைத்து துறைகளிலும் பொது விடுமுறை தினங்களாக கடைபிடிக்கப்படும் என்று அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.