முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாவின் ஆட்சியை தொடரும் அநுர அரசு : சாடும் முன்னாள் எம்.பி

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி
கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும்
அவருடைய கட்சியும் நடாத்துகின்றது என முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் (Govindan Karunakaram) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாவிக்கரையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்றையதினம் (22.12.2024) இடம்பெற்ற ஊடக  சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை மீண்டும் ஒருமுறை இந்திய சீனாவின் அதிகார போட்டியில் சிக்கி
இருக்கின்றது சர்வதேச அரசியல் அப்படி இருந்தாலும் கடந்த காலத்தில் போராட்ட
இயக்கமாக இருந்த என்பிபி இன்று ஆட்சியை பிடித்துள்ளனர்.

அத்தமீறிய குடியேற்றம் 

இவர்கள் ஆட்சியை
பிடிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல்
விஞ்ஞாபனத்திலே வடக்கு கிழக்கை மையமாக வைத்து அத்தமீறிய குடியேற்றம்
நிறுத்தப்படும்.

கோட்டாவின் ஆட்சியை தொடரும் அநுர அரசு : சாடும் முன்னாள் எம்.பி | Karunakaram Press Meet Batticaloa

ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு முடிவைக் கொண்டுவருவோம் என சில வாக்குறுதிகள்
அளித்தனர்.

ஆனால் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பிரச்சனை வருடக்கணக்காக
பயன்படுத்திய கால்நடை உரிமையாளர்கள் இன்று வரை வீதியில் உட்காந்திருக்கின்றனர்.

மேலும், அரசியல் கைதிகள் ஒருவர் கூட இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை
அதேபோன்று வடக்கு கிழக்கில் பொதுமக்களின் ஆயிரக் கணக்கான காணிகளை
இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக ஆட்சி

ஊழலுக்கு எதிராக ஆட்சி என கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களின்
பெயர்பட்டியல் வெளியிடப்படுகின்றது ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பண ஊழல்
செய்த அரசியல்வாதிகள் மற்றும் விமானப்படையின் விமானங்களை பயன்படுத்திய
அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதுடன் மற்றும் முன்னால் ஜனாதிபதிகளின்
பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது

கோட்டாவின் ஆட்சியை தொடரும் அநுர அரசு : சாடும் முன்னாள் எம்.பி | Karunakaram Press Meet Batticaloa

2015 தொடக்கம் 2020 வரை ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே இருந்து
கோடிக்கணக்கான பொருட்கள் மாயமாகியுள்ளதை கண்டுபிடிக்கப்படுகின்றது இவ்வாறு
எதிர்காலத்தில் தாங்கள் அரசியல் ரீதியாக பலமாக இருக்கவேண்டும் என அரசியல்
ரீதியாக சில விடையங்கள் நடைபெறுகின்றது

எனவே தெற்கிலே பலமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் கடந்த கால தேர்தல்களில்
வடகிழக்கில் இவர்களை நம்பி கணிசமான வாக்களித்த வடகிழக்கு தமிழ் மக்களுக்கு
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்தவண்ணமாக இருக்கின்றது.

வடகிழக்கு
தமிழ்மக்களுக்கான தீர்வை கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று சொன்ன
இந்திய பிரதமர் மோடி நாங்கள் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக ஒற்றுமையாக ஒரே
கட்சியில் ஒரே கூட்டணியில் பயணித்திருந்தால் கணிசமான பிரதிநிதித்துவத்தை
பெற்றிருந்தால் ஒரு பலமான அழுத்தத்தை மோடி ஜனாதிபதிக்கு கொடுத்திருப்பார் எனவே
இவற்றை நாங்கள் கருத்தில் கொண்டு ஒரு பலமான ஒரே சக்தியாக தமிழ் மக்களுக்காக
செயற்படவேண்டும். 

கோட்டடபாய ராஜபக்ச காலம் 

கோட்டடபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி
கணிப்பிட்டாரே அந்த கணிப்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஜனாதிபதியும்
அவருடைய கட்சியும் நடாத்துகின்றது

கோடா கலாலத்தில் தொல்பொருள் என்ற செயலணியை நியமித்தார்.

கோட்டாவின் ஆட்சியை தொடரும் அநுர அரசு : சாடும் முன்னாள் எம்.பி | Karunakaram Press Meet Batticaloa

அதில் பௌத்த
பிக்குகளும் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் என எந்தவிதமான
நிபுணத்துவமும் இல்லாத 11 பேர் நியமிக்கப்பட்டனர்

அனுராவுக்கு கணிசமானளவு தமிழ் முஸ்லீம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை
உணர்ந்து கொண்டு எதிர்காலத்திலே இந்த நாடு ஒரே நாடு நாங்கள் எல்லாம்
சமத்துவமான மக்கள் என வாய்கிழிய கூறும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும்
இப்படியான தவறுகளை விடாமல் நடக்கவேண்டும். 

அதேவேளை 2018 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமையில் 5 வாக்கு
10 வாக்கு எடுத்தவர்களும் ஒரு உறுப்பினர்களாக வந்து மன்றங்களில் குழப்பநிலை
ஏற்படுத்தும் நிலை இந்த முறையில் தங்கியுள்ளது எனவே இந்த சட்டமூலத்தை
கொண்டுவந்த அரசாங்கம் கூட குளறுபடியான சட்டமூலம் என ஏற்றுக் கொண்டது எனவே இந்த
சட்டமூலத்தை திருத்தி விகாதாசார முறையே அல்லது வட்டாரங்களை மட்டும் உள்ளடக்கிய
ஒரு புதிய முறையை கொண்டுவந்தால்தான் உள்ளுராட்சி மன்றங்கள் ஒழுங்காக
ஆட்சியமைக்கப்பட்டு ஒழுங்கான முறைக்குவரும்” என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/2NhpWtWjA3k

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.