கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (24) 147.79 புள்ளிகளால் அதிகரித்து 15,168.40 ஆக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அதன் மொத்த புரள்வு 5.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 15 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.