மன்னார்
நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை
பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள்
அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது
பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் சுமார் 300இற்கும் மேற்பட்ட
வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபார நடவடிக்கைகள்
இடம்பெற்று வருகிறது.
உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில்
கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி – ஆசிக்
வவுனியா
வவுனியாவில் நத்தார் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது.
உலகம் பூராக இயேசுவின் பிறந்தநாளை கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக
கொண்டாடுகின்றனர்.
அந்த வகையிலும் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள்
மற்றும் பட்டாசுகள், கிருஸ்மஸ் மரங்களையும் வேண்டிச் செல்வதை அவதானிக்க
கூடியதாக இருந்தது.
செய்தி – திலீபன்