கம்பஹா-மீரிகம பிரதேச சபையுடன் இணைக்கப்பட்ட வேவெல்தெனிய துணை அலுவலகத்தின் பதில் வருமானத்திணைக்கள அதிகாரி உட்பட இரண்டு பேர், 1,170 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்றதற்காக, லஞ்ச ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான கடையின் வருடாந்த உரிமத்தை மறுபரிசீலனை செய்வதற்காக கொஸ்கமவில் உள்ள இறைச்சி கடை உரிமையாளரிடம் லஞ்சம் கோரியபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதிகாரி கைது
மீரிகம பிரதேச சபையின் களப்பணியாளர் உட்பட இந்த இரண்டு பேரும் இறைச்சி கடைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.