முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார்.

மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது
வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில்
இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி
இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலப்பட்டது.

சுனாமி பேபி 81

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக ”சுனாமி பேபி 81”எனும் பெயருடன்
உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி | Tsunami Baby Tribute To People Died In The Tsunami

இந்தக் குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர்
அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான்
நீதிமன்றத்தை நாடியது.

இக்குழந்தை எங்களுடையது என ஒன்பது தாய்மார் போராடிய நிலையில், ஒன்பது
தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி 

பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே
அபிலாஷ் என நிரூபணமாகிய பின்னர் அந்த குழந்தை குறித்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி | Tsunami Baby Tribute To People Died In The Tsunami

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது
இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி
ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.

இந்த நிலையில் 20 வயதுடைய அபிலாஷ் அவரது இல்லத்தில்
அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த
உறவுகளுக்காக தனது பெற்றோருடன் அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.