முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடுத்த வருடம் முதல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கறுவாப்பட்டை

இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் (Department of Cinnamon Development) தெரிவித்துள்ளது.

இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன்களாகும், இதில் கிட்டத்தட்ட 19,000 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இலங்கை தற்போது கறுவா ஏற்றுமதியின் மூலம் சுமார் 250 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிண்டார தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் கறுவா ஏற்றுமதி

மேலும் கறுவா செய்கையின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாரம்பரியமாக கறுவா பயிரிடப்பட்டு வரும் காலி (Galle), மாத்தறை (Matara) ஹம்பாந்தோட்டை (
Hambantota) பிரதேசங்களுக்கு மேலதிகமாக குருநாகல், புத்தளம் மற்றும் மகாவலி பிரதேசங்களில் இலவங்கப்பட்டை செய்கையை விரிவுபடுத்த கறுவா அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கறுவாப்பட்டை | Cinnamon Spice Export Sri Lanka Income

இதேவேளை, கறுவா ஏற்றுமதி தொடர்பில் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீனாவுக்கும் கறுவா ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு கறுவா ஏற்றுமதியை அதிகரிக்கவும் கறுவா அபிவிருத்தி திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.