முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்து: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்
பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம்
இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகனுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார். 

தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை
அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள்
பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும்
கொண்டு செல்லப்பட்டது.

ஆளுநர் அறிவுறுத்தல்

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.

யாழில் பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்து: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Action Against Driver Who Breached The Rules

இதற்கு அமைவாக முதல்கட்டமாக குறித்த தனியார் பேருந்தின் உரிமையாளரின்
பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சாரதி, நடத்துனர்
மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன்
அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகார சபையின்
தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்