மட்டக்களப்பில்(Batticaloa) கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய கிராமசேவையாளர் சங்கத்தால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(30) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம்
மக்கள் சேவை செய்யும் எங்களை பொலிஸார் நீங்கள் புறக்கணிப்பது ஏன்?
தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், உடனடி தீர்வு வேண்டும், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.