யாழ்ப்பாணம் – தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார
மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்(K. Ilankumaran) ஆராய்ந்துள்ளார்.
குறித்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட
போதிலும் இன்றுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுமான செலவு
இந்நிலையில், இதன் கட்டுமான செலவுக்கு 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய நிலையத்தினை இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் மக்களிக் கருத்துக்களையும் கேட்டறிந்ததானவும் தெரிவிக்கப்படுகிறது.