முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை மற்றும், அதிகரித்த
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பருவகால இறால்பிடி
பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழிலால் மக்கள் முற்றுமுழுதாக
நசுக்கப்படுகின்றார்கள். மக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இந்த விடயத்தை
புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

முல்லைத்தீவு, மன்னார்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான
கடற்றொழிலாளர்கள் வட பகுதியில் உள்ளனர். இவர்களுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.
செய்வதறியாது மக்கள் குமுறுகின்றனர்.

இறால் பருவகாலத் தொழில் 

இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையைச் சிதைக்கின்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி மாதங்கள் இறால் பருவகாலத் தொழிலை வடக்கில்
முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி உட்பட சில இடங்களிலுள்ள
மக்கள் மேற்கொள்வார்கள்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Indian Illeagal Fishing Issue North People Request

இப்பகுதி கடற்றொழிலாளர்களின் வருடாந்த சேமிப்பாக இந்த
மூன்று மாதகால தொழில் அடங்கும்.

கடந்த சில வருடங்களாக இறால் பருவகாலத் தொழில்
செய்வதற்கு இந்திய இழுவைப்படகுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. 

முல்லைத்தீவின் கடற்கரையோரங்களுக்கு இந்திய இருவைப்படகுகள் வருகை தந்து
இழுவைமடி, சட்டவிரோத தொழிலை செய்வதால் எமது கடற்றொழிலாளர்களின் தொழில்கள் முற்றாகப்
பாதிப்படைந்துள்ளன.

கடற்படையினர் எமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட இந்திய
இழுவைப்படகுகளின் சட்டவிரோத தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றார்களோ என்ற
சந்தேகம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சட்டவிரோத தொழில்கள்

ஏன், அண்மையில் மியன்மார் நாட்டிலிருந்து படகில் வந்த அகதிகள் கூட
முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வரும் வரை கடற்படைக்குத் தெரியாது. இந்த நிலமைகள்
மாறவேண்டும்.

எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக எமது கடலில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டும். தங்களின்
வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்கவேண்டும். சட்டவிரோத தொழில்கள் யார் செய்தாலும்
தடுக்கப்படைவேண்டும். தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Indian Illeagal Fishing Issue North People Request

அடுத்த நாடுகளின் படகுகள் தங்களுடைய கடலில் தொழில் செய்யட்டும். எல்லை தாண்டி
எமது கடற்பரப்புக்குள் அந்நியப் படகுகள் நுழைவதை கடற்படை தடுக்கவேண்டும். இதனை
கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

உங்களால் முடியாவிட்டால் எமது கடற்றொழிலாளர்களிடம் அந்தப்பொறுப்பை ஒப்படையுங்கள்.
கலங்களையும் தாருங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

தயவு செய்து வடபகுதி கடற்றொழிலாளர்களை வாழவிடுங்கள். புதிய அரசானது பாகுபாடு
காட்டாமல் எமது கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் என்று நம்புகின்றோம்” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.