சாய்ந்தமருது (Sainthamaruthu) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பண்டங்களை கையாளும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (06) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜெ.மதன் தலைமையில் மேற்பார்வை
பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் அடங்கலான பொது சுகாதார பரிசோதகர்கள்
மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த திடீர்
பரிசோதனையில் ஈடுபட்டனர்.
சட்ட நடவடிக்கைகள்
இதன் போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் முறையற்ற வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட ஒன்பது வியாபார நிறுவனங்களுக்கு எதிராக
சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கியமைக்காக தண்டம் விதிக்கப்பட்டது.
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தனுக்கு, கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றமையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








