ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் நாட்டில் க்ளீன் ஸ்ரீலங்கா என்ற பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதில் முதற்கட்டமாக வாகனங்களை அலங்கரிக்க பயன்படுத்தும் மேலதிக பாகங்களை நீக்க வேண்டுமென இலங்கை பொலிஸ் திணைக்களம் வாகன சாரதிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும், ஒரு சில நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் அண்மைய நாட்களாக அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும், நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில், வாகன அலங்காரங்களை மாத்திரம் தற்போது நீக்கி வருவதென்பது தங்களது தொழிலை பெரிதளவில் பாதித்துள்ளதாக குறித்த துறையுடன் தொடர்புடைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தில் இணைத்து முன்னெடுக்கின்றமையானது, தங்களது தொழிலை பெரிதளவில் பாதித்துள்ளதாக இதனுடன் தொடர்புடைய வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…