சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரை தடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் என பிரதமர் ஹரிணி(harini amarasuriya) அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அதனை பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிரான நடவடிக்கை
இதனையடுத்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை நிறுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.