Courtesy: Shanmugam Thavaseelan
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடம் இருந்து
விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக
அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி, உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது, நேற்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷ
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால்
அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் அந்த அபகரிக்கப்பட்ட துயிலுமில்ல
காணிக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாவீரர் தினத்தை
அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியதை போன்று தங்களுடைய பிள்ளைகளின் கல்லறைகள்
இருக்கின்ற குறித்த காணியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து தருமாறு கோரி
குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.