இலங்கை மக்கள் வங்கியின் சேவைகளில் ஒன்றான, People’s Pay Wallet செயலி மேம்படுத்தப்படுவதனால், குறிப்பிட்ட நேரங்களில் அச்சேவை தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்படும் நேரம்
இதன்படி, இன்று (09) பிற்பகல் 11.00 மணி முதல் நாளை முற்பகல் 03.00 மணி வரை குறித்த செயலி சேவை தடைபடும்.
அதேவேளை, மக்கள் வங்கியின் தனிநபர் இணைய வங்கியியல், பெருநிறுவன இணைய வங்கிச் சேவைகள், People’s Wave மற்றும் People’s Wyn Mobile Banking App ஆகிய செயலிகள் மேற்குறிப்பிட்ட நேரத்தில் சேவையில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்காக தாம் வருந்துவதாகவும் பொதுமக்களிடம் மக்கள் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.