மேக்ஸ்
கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சுதீப். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே நான் ஈ படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒன்று. சுதீப் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மேக்ஸ்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்த மேக்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது கன்னட நடிகர் சுதீப் கிடையாதாம்.
பிரபல பின்னணி பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
முதல் சாய்ஸ்
தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் விதார்த் தான் ஹீரோ கதாபாத்திரத்தின் முதல் சாய்ஸ் என கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயன், இப்படத்தின் கதையை உருவாக்கும்போதே, இதில் நடிகர் விதார்த்தை ஹீரோவாக வைத்து தான் உருவாக்கியுள்ளாராம்.
தயாரிப்பாளர் தாணுவிடம் கதையை கூறி, விதார்த்தை இதில் நடிக்க வைக்கலாம் என கூறியபோது, கன்னட நடிகர் சுதீப்பின் கால்ஷீட் என்னிடம் இருக்கிறது, அவரை வைத்து இப்படத்தை எடுங்கள் என தயாரிப்பாளர் தாணு கூறியதால், இப்படத்தில் சுதீப் ஹீரோவாக நடித்துள்ளாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.