இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
போதுமான விமானங்கள் இல்லாததால் விமான தாமதங்களைச் சமாளிக்க சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்போது சிரமப்பட்டு வருகிறது.
செலவுகள்
2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை, 548 விமானங்கள் 3 முதல் 56 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக அறிக்கையும் வெளியாகியது.
அத்தோடு, இந்த தாமதங்களை தவிர்பதற்கு ஏனைய விமான நிறுவனங்களின் உதவியைப் பெற 2023 ஆம் ஆண்டில் நிறுவனம் $784,000 செலவிட்டது.
தேவையான விமானங்கள்
இந்த நிலையில், போதுமான விமானங்கள் இருந்தால், மற்ற விமான சேவைகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டிப்படுகிறது.
இவ்வாறதொரு பின்னணியில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தேவை மதிப்பீட்டின் படி, 27 விமானங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 21 மட்டுமே உள்ள என்பது குறிப்பிடத்தக்கது.