முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல்

தேசிய மக்கள் சக்தி அரசு
தற்போது பதற்றமடைய ஆரம்பித்திருப்பதாகவும் அவர்கள்  ஊடகங்களை கையாளும்
விதத்தில் இது தெளிவாகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் குறிப்பிடுகையில்,

அண்மைக்காலமாக அரசின் பிரதிநிதிகள் சிலர் ஊடகங்களுடன் முரண்பட்டு
வருகின்றனர்.

குறிப்பாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்கள் தொடர்பில்
பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். சில சந்தர்ப்பங்களில்
கருத்து வெளியிடுகையில், பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.

அரசு பதற்றம்

நாடாளுமன்றத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர்களைக்கூறி
உரையாற்றுகின்றார். நான் கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சில் பணியாற்றியவன்
என்ற ரீதியில், தற்போதைய அரசு ஊடகத்துறையைக் கையாளும் விதம் மிகவும் ஆபத்தானது
என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல் | Anura Government Is Panicking Charitha Herath

அரசு தற்போது பதற்றமடைந்து துலங்கலை வெளிக்காட்டும் நிலையை
அடைந்திருக்கின்றது. வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் மாறுபட்ட
கருத்துக்களை வெளியிடக்கூடும்.

இருப்பினும் நாம் அதனைப் பொறுமையுடன் கையாண்டு,
அதற்கு அறிவார்ந்த ரீதியில் பதிலளிக்க வேண்டும்.

மாறாக ஊடகங்கள் தமக்கு ஏற்றவாறு அல்லது தமக்குச் சார்பாக செயற்படவில்லை என
அரசு பதற்றம் அடையக்கூடாது.

பொருளாதாரக் கொள்கை

எனவே, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட
அரசின் பிரதிநிதிகள் ஊடகங்களைப் பெயர் குறிப்பிட்டுத் தாக்குவதை உடனடியாக
நிறுத்த வேண்டும்.

பதறுகின்றது அநுர அரசு! மொட்டுக் கட்சி விளாசல் | Anura Government Is Panicking Charitha Herath

முன்னாள் ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டங்களைத் தவறு என்று தேசிய மக்கள்
சக்தியினர் விமர்சித்தனர்.

தாம் புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதாகக்
கூறியே அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினார்கள். ஆனால், ரணிலின் பொருளாதாரக்
கொள்கைகளையே தற்போதைய அரசினரும் மாற்றமின்றிப் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.