2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு (Sri Lanka) அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுப் பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
10.1 சதவீதத்தினால் அதிகரிப்பு
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 10.1% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி 109.69 ரூபா பில்லியனாக உள்ளது என அந்த நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.