முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் – LIVE

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும்
வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக
இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது
வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை
பொங்கல் பண்டிகையை  இன்று வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள்
ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள்
நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும்
இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.  

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka   

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

 சிவப்பரிசிக்கு தட்டுப்பாடு – நானுஓயாவில் வெள்ளை அரிசியில் சூரிய பொங்கல் 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும்
சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று
பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொது மக்கள் சிவப்பரிசிக்கு ஏற்பட்டுள்ள
தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

மேலும் மலையகத்தில் அதிக வீடுகளில் இன்று (14) காலை சூரிய பொங்கல் வைப்பதற்காக
வெள்ளை அரிசியை பயன்படுத்தினர்.

மேலும், தொடர்ந்து மழையுடனான சீரற்ற காலநிலை
நிலவி வருகின்ற போதிலும் மக்கள் தை திருநாளை கடந்த வருடங்களை விட ஓரளவு
மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக பொங்கலுக்கு பயன்படுத்தும் தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை
அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து
ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கு இணங்க தமிழ் மக்கள் தமது
சூரியக் கடவுள்ளுக்கு நன்றி தெரிவித்து தைப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில்
புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு
தலைமையில் விசேட அபிடேகம் மற்றும் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதன்போது, பக்த அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பொங்கல்
வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இதேபோல் ஏனைய இந்து ஆலயங்களிலும் விசேட
பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

மன்னாரில் மழைக்கு மத்தியில் தைப்பொங்கல் கொண்டாட்டம் 

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல்
பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும்
கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகை யை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல்
நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க
தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல்
பொங்கி மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான
முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.  

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

கிளிநொச்சியில்  தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தமிழ்ப் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி கொண்டாட்டத்தில்
ஈடுபடுகின்றனர். 

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட
பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்
தலமையில் இன்று காலை 8:00 மணியளவில் இடம்பெற்றது.

முன்னாதாக காலை 5;00 மணியளவில் விசேட ஓம பூசைகள் இடம் பெற்று 6:30 மணிக்கு
வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்றதை தொடரந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார்
உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் கொண்டாட்டம்  இடம்பெற்றது.

இதில் வடமராட்சியின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டனர். 

மட்டக்களப்பு 

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும்
பொங்கல்பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல்
வழிபாடுகள் நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல்
பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல்
படைக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் விசேட
பூஜைகள் நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka   

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த
விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும்
செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோன்று இன்று அதிகாலைமுதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு
வணக்கம் செலுத்தப்பட்டது. 

 புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விஷேடப் பூஜை

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் என்று கூறக்கூடிய தைப்பொங்கல் விழா இந்து
ஆலயங்களிலும் அதேபோன்று வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தைப்பொங்கல் ஆனது சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முகமாகவும் நமஸ்காரம்
செய்கின்ற முகமாகவும் அதேபோன்று உழவர்கள் தங்களுடைய உழவுத் தொழிலை முடித்து
அதில் கிடைக்கக்கூடிய அரிசியை தைத்திருநாளில் பொங்கலாகப் பொங்கி சூரிய பகவான்
எனும் கதிரவனுக்கு நன்றி கூறும் முகமாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடி
வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka  

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜைகள் ஆலய
பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

தைப்பொங்கல்  திருநாளைக் கொண்டாடும் இந்து மக்கள் நீராடி புத்தாடை அணிந்து
ஆலயத்திற்கு வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக
இருந்தது. 

நாடளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் - LIVE | Thai Pongal Festival In Sri Lanka

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.