சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சின் (Ministry of Finance) அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன் ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (08) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் அளவை அதிகரிப்பதற்கு பொது நிதிக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.