முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் திசைகாட்டியின் ஆதரவாளர்கள் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல்

தேசிய மக்கள் சக்தி ( National People’s Power) ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறைப் (Point Pedro) பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலொன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நேற்றையதினம் (16.01.2024) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பெடுத்த நபர் ஒருவர் “நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்?உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

வாள்வெட்டுக் குழு

அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்களை துரத்தித் துரத்தி வாள்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

யாழில் திசைகாட்டியின் ஆதரவாளர்கள் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் | Sword Attack On Npp Supporters In Jaffna

இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கொட்டடி பகுதியை சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

காவல்துறை  விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் (Chandrasekar) மற்றும் தே.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) ஆகியோர் விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்த பின்னர் பருத்தித்துறை காவல் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழில் திசைகாட்டியின் ஆதரவாளர்கள் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் | Sword Attack On Npp Supporters In Jaffna

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர் தாக்குதல்தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.