வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில்
மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி காவல் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம்
காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை
ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் காவல்துறையினருக்கு
அறிவித்ததை அடுத்து ஸ்தலத்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சொகோ தடயவியல்
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.