பதுளை (badulla)மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா, மேற்கண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தின் தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன(samantha vidyaratna) தலைமையில் பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை(15) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலச்சரிவு
காலநிலை மாற்றத்தால் உலகளாவிய அதிக ஆபத்துள்ள நாடாக இலங்கை மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, பதுளை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலச்சரிவுகள், கடுமையான மண் அரிப்பு, குடிநீர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் தொற்றுநோய்களால், உள்கட்டமைப்பு அழிவை சந்தித்து வருகிறது.
இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பு மிகப்பெரியது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.