ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை இன்றையதினம்(16) ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோரினா பிரதமரிடம் கையளித்துள்ளார்.
எதிர்காலத் தேர்தல்
இதன்போது, எதிர்காலத் தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.