நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன்
ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் நுவரெலியாவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம், நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி
தலைமையில் கீழான பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் இன்றையதினம்(17.01.2025) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பேருந்து தரிப்பிடத்தில் அனாவசியமான முறையில் காட்சிப்படுத்தப்பட்ட
சுவரொட்டிகள் மற்றும் படங்கள் நிறைந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு வெற்று
வளவுகளில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றும் பணிகள் மூலம் தூய்மையாக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்
மாநகரசபை வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி, குறித்த பகுதிகள் கழுவி
சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, அந்த இடத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரேமலால்
ஹொட்டியராச்சி தலைமையில் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் வெற்றிலை
எச்சில் துப்பிய சிலருக்கும் அசுத்தமான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்கியமை
குறிப்பிடத்தக்கது.