மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக பட்ட பகலில் இருவருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
குறித்த சம்பவம் 15 ஆம் திகதி காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு வருகை தந்த நாள்வர் மீது மோட்டார் சைகிளில் வருகை தந்த இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாள்வரில் இருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தினர்.
குறித்த சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் காவல்துறையினர் மீதும் சட்டத்தின் மீதும் மக்களுக்கான பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாக பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இது தொடர்பில் தமிழர் பிரதேச மக்கள் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/TYvDL_rHqYg?start=2