மஸ்கெலியா (Maskeliya) – மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள லயன் வீடுகள் வரிசையில்ன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் சம்பவம் நேற்று இரவு (17.01.2025) 11.30 மணியளவில் தீ பரவியதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
12 வீடுகளை கொண்ட இந்த நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
தீ விபத்து
தோட்டத் தொழிலாளர்கள், காவல்துறையினர் மற்றும் மவுஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் இணைந்து 12 வீடுகளில் பரவிய தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீயினால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், அழிந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீயினால் இடம்பெயர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு தோட்ட நிர்வாக அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.