நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் தம்பதியின் சடலங்கள், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குருணாகல் – பன்னல, கங்காணியம்முல்ல காப்புக்காடு பிரதேசத்தில் இருந்தே மேற்கண்டவாறு தம்பதியின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் ஆண் 37 வயதுடையவர் என்றும், அவர் இராணுவத்தில் பணிபுரிந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உயிரிந்த பெண் 32 வயதுடையவர் என்றும் , ஆசிரியையாகப் பணியாற்றியவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.