மட்டக்களப்பில் 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தை சேர்ந்த இரண்டு (02) பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
குறித்த நபர், மின் இணைப்பை பெற முயற்சி
செய்துள்ள வேளையில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை தெரிய
வருகின்றது.
இந்நிலையில், நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து
செல்லப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.