முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரையில் நேற்றையதினம்(19) பட்டத் திருவிழா மிகச்
சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு – வட்டுவாகல்
கிராமத்தைச் சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப்
பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன் பங்கேற்றுள்ளார்.
பட்டத்திருவிழா
விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தொடர்ந்து விளக்கேற்றலை அடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள்
கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறார்கள் முதல் பெரியோர் வரை இணைந்து இந்தப் பட்டம் விடும்
திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையெங்கும்
அழகிய வண்ணப்பட்டங்கள் வானை அலங்கரித்தன.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன்,
கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார்,
வட்டுவாகல் அறநெறிபாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர்
பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து
மகிழ்ந்திருந்திருந்தார்கள்.