முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய-சீன சமநிலை இறுக்கமான கயிற்றில் நடக்கும் இலங்கை! பொதுவெளியில் வராத உண்மைகள்

இலங்கை பொறாமை கொண்ட இரண்டு தரப்பினருக்கு மத்தியில் இறுக்கமான கயிற்றில்
நடந்து கொண்டிருப்பதாக அரசியல் விமர்சனம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விடயத்தை
குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கு (China) விஜயத்தை மேற்கொண்ட இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake),
ஒப்புக்கொண்ட விடயங்கள் மற்றும் சீனாவுடன் இணங்கிச்செல்லும் விடயங்கள்,
இந்தியாவின் நலனுக்கு பாதகமாக இருந்து விடக்கூடாது யதார்த்தமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்தநிலையில் அநுரகுமாரவுக்கு வழங்கப்பட்ட அபரிமிதமான விருந்தோம்பலின்
மத்தியில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளின் சாராம்சம் பொது களத்தில்
வெளிவரவில்லை என்று குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்திய-சீன சமநிலை இறுக்கமான கயிற்றில் நடக்கும் இலங்கை! பொதுவெளியில் வராத உண்மைகள் | India China Balance Will Go Sri Lanka

உதாரணமாக, கையெழுத்திடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது
நடத்தப்பட்ட கூடுதல் சந்திப்புகளின் விபரங்கள் குறித்து இன்னும் தெளிவு இல்லை
என்று ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே சீனாவின் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா பாதுகாப்பு
பிரச்சினையை எழுப்பியிருந்த நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்
எரிபொருள் சுத்திகரிப்பு மையம் மற்றும் பொருளாதார மண்டலம் என்று சீனாவுக்கு
உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இது, சீனக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புக்களை
ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்தித்தாளின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பு

இந்த இடத்தில் இலங்கையை இந்தியாவை எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது என்பதே
கவனிக்க வேண்டிய விடயமாக அமைந்துள்ளது.

இந்திய-சீன சமநிலை இறுக்கமான கயிற்றில் நடக்கும் இலங்கை! பொதுவெளியில் வராத உண்மைகள் | India China Balance Will Go Sri Lanka

இந்தியா, அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமையின் மூலமும் சீனா VRI என்ற
பட்டுப்பாதையின் மூலமும் இலங்கையை கவர்ந்திழுக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைந்து கொள்ள வேண்டும் என்பதிலும்
சீனாவின் ஆர்வம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எனினும் பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்ளும் விடயத்தில் இந்தியா
இன்னும் தமது ஆர்வத்தை காட்டவில்லை என்றும் ஆங்கில செய்தித்தாளின் செய்தி
ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.