நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர (Ajith Gunasekera) தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலேயே கோழி இறைச்சி விற்பனை இவ்வாறு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை ஒன்றின் விலை
அத்துடன் கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளது.
இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை தீவனத்தின் மீதான வரி
அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்திக்கு 750 ரூபாவும், முட்டை உற்பத்தி செய்ய 34 ரூபாவும் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனத்தின் மீதான வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஒரு முட்டைக்கு 6 ரூபாவும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாவும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.