முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பிற்கு மறைமுக மிரட்டல் விடுத்த ஈரான் : வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நேற்று (20.01.2025) பதவியேற்ற நிலையில் அதற்கு முன்பாக ஈரான் (Iran) வெளியிட்ட காணொளி தற்போது சர்வதேச பரப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருவதுடன் இருநாடுகளும் இப்போதும் எதிரெதிர் துருவங்களாக தான் உள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருப்பினும் ஈரான் எண்ணெய் வளமிக்க நாடு.

பொருளாதார தடை

இதனால் கச்சா எண்ணெய் பிசினஸ் மூலம் அமெரிக்கா பொருளாதார தடைகளை தாண்டி ஈரான் ஓரளவு தாக்குப்பிடித்து வருகிறது.

ட்ரம்பிற்கு மறைமுக மிரட்டல் விடுத்த ஈரான் : வெளியிட்ட அதிர்ச்சி காணொளி | Iran Unveils New Underground Naval Base

தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக உள்ள டிரம்புக்கு ஈரானை சுத்தமாக பிடிக்காது.

இதனால் தான் இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலின்போதும் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.

ஈரானின் முக்கிய பாதுகாப்பு தளங்களையும், அணு உலைகளையும் தான் தாக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்

இந்த கருத்தை டொனால்ட் ட்ரம்ப் கூறியபோது அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தான் இருந்தார். ஆனால் தற்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்று நேற்று அந்த பதவியையும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

ட்ரம்பிற்கு மறைமுக மிரட்டல் விடுத்த ஈரான் : வெளியிட்ட அதிர்ச்சி காணொளி | Iran Unveils New Underground Naval Base

இதனால் வரும் நாட்களில் உலக அரசியல் என்பது முற்றிலும் மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கையால் சீனா, கனடா மற்றும் ஈரான் நாடுகள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் டிரம்பின் பதவியேற்புக்கு முன்பாக ஈரான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி ஈரானின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளதுடன் , குறித்த காணொளியில் சுரங்கம் போன்ற அமைப்பில் ஸ்பீட் படகுகள் (Speed Boat) ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

ஈரான் வெளியிட்ட காணொளி 

ஸ்பீட் படகுகளை பயன்படுத்தி கடலில் இருந்தே ஏவுகணைகளை ஏவி எதிரிகள் மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.

மேலும் அந்த காணொளியில் காட்டப்பட்ட சுரங்கம் என்பது பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது பூமியில் இருந்து 500 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து அதில் தான் ஈரான் தனது கடற்படைக்கு சொந்தமான ஸ்பீட் படகுகளை நிறுத்திவைத்துள்ளது.

ட்ரம்பிற்கு மறைமுக மிரட்டல் விடுத்த ஈரான் : வெளியிட்ட அதிர்ச்சி காணொளி | Iran Unveils New Underground Naval Base 

மேலும் இந்த காணொளியை இப்போது வெளியிட்டுள்ளதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

அதாவது அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் உள்ளது. டொனால்ட் டிரம்பும் தீவிர ஈரான் எதிர்ப்பாளர். இதனால் அவர் விரைவில் ஈரானுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடலாம்.

எனவே டொனால்ட் டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ரகசிய கடற்படை தளம் குறித்த காணொளியை ஈரான் வெளியிட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

https://www.youtube.com/embed/x_gx8ABvhU0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.