முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவலமான வார்த்தை

 அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்து சமயத்தையும் இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும்  இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமை கண்டனத்திற்குரியது.

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. - வலுக்கும் கண்டம் | Dr Archuna Mp Talked Against Hinduism

இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளைப் பேசுபவருக்கெதிராக இலங்கைச் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

இதே போன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாகப் பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

வீதியில் இறங்கி போராட்டம்

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. - வலுக்கும் கண்டம் | Dr Archuna Mp Talked Against Hinduism

ஜனாதிபதியோ இந்து கலாசார அமைச்சோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடுவோம்.

மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்