முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்தார் என்றும், இதன் காரணமாக அவரது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்..
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களின் அடிப்படை பிரச்சினை
“இந்த அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துகொண்டு செயற்படுவது போல தோன்றுகிறது.
இந்த செயற்பாடு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மறக்க செய்கிறது.
இந்தியாவுடன் கையெழுத்திடப்படும் ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினைகள் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
எட்கா ஒப்பந்தம் பற்றிய பிரச்சினைகள் முடக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மகிந்த ராஜபக்ச ஒரு ஆபத்தை எடுத்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தகைய நபருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான பதில் கிடைக்க வேண்டும்.
இல்லையெனில், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது’’ என்றார்.