நாடாளுமன்றில் உறுப்பினர்களின் உணவுக்கான அதிகரித்த விலை விரைவில் அறிமுகம்
செய்யப்படவுள்ளது.
இதன்படி, காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் உள்ளிட்ட உணவுகளுக்கு
3,000 ரூபாய் செலவாகும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று(22.01.2025) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் நாளையதினம் நாடாளுமன்றத்தின் சபை பராமரிப்பு குழுவில்
சமர்ப்பிக்கப்படும் என்றும், விரைவில் அமைச்சரவையிலும், இந்த திட்டம்
சமர்ப்பிக்கப்படும் என்றும் ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஏனையவர்களுக்குமான உணவு
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர்ந்த ஏனையவர்களுக்குமான உணவு விலையும்
அதிகரிக்கப்படும் என்று பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.