பேரீச்சம்பழத்திற்கான விசேட பண்ட வரியைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு (Ministry of Finance) வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பேரீச்சம்பழம் நன்கொடை
இந்தநிலையில், ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நுகர்வுக்காக சவுதி அரேபியா (Saudi Arabia) இலங்கைக்கு 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் நேற்று (27) நடந்த நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் கையளித்துள்ளார்.