முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு – இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா

யாழ். (Jaffna) கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் (New Delhi) உள்ள பதில் இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு - இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா | Ministry Of External Affairs India Warns Sl Army

அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான

பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடற்படை வீரரின் துப்பாக்கிச் சூடு 

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை

என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு - இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா | Ministry Of External Affairs India Warns Sl Army

இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது என கடற்படை விளக்கமளித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு கடற்றொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றிய செயல்

தமது படகிற்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதோடு குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர்.

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு - இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா | Ministry Of External Affairs India Warns Sl Army

கடற்படையினருக்குள்ள அதிகாரத்துக்கமைய அவர்கள் குறித்த படகில் இறங்கிய போது இந்திய கடற்றொழிலாளர்கள் குழுவாக அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு கடற்றொழிலாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.