முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் நாளொன்றுக்கான மதுபான கொள்வனவு! அதிர்ச்சி தகவல்களை கூறிய ஆய்வு

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்க்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்(ADIC) தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கு 83% மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், மதுபானத்தினால் இலங்கைக்கு 165.2 பில்லியன் வருமானம் கிடைத்துள்ள போதிலும் 237 பில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகக் குடிப்பழக்கம்

அத்துடன், மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 40 – 50 பேர் வரை உயிரிழப்பதாகவும் இந்த தொகை வருடத்திற்கு 15,000 – 20,000 எனவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் நாளொன்றுக்கான மதுபான கொள்வனவு! அதிர்ச்சி தகவல்களை கூறிய ஆய்வு | Alcohol Consumption In Sri Lanka Per Day

இதனால், இலங்கையில் பல குழந்தைகள் தந்தையை இழந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒன்று கூடும் இடங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபாவனை அதிகரித்திருப்பதால் சமூகக் குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவு

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாய்களை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததாகவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் ‘ADIC’இன் நிர்வாக இயக்குனர், சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கான மதுபான கொள்வனவு! அதிர்ச்சி தகவல்களை கூறிய ஆய்வு | Alcohol Consumption In Sri Lanka Per Day

மேலும், 2019ஆம் ஆண்டு புகையிலை வரி 92.9 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்